Posts

Showing posts from 2022

Ponniyin selvan & It's participatory culture

Image
Participatory culture - New media studies Ponniyin selvan – Fiction movie based on novel This film is created based on the famous Tamil novel Ponniyin selvan and directed by Mr. Maniratnam. That novel is a fiction story based on historical events among Chola dynasty in Tamilnadu and written by Kalki ramamoorthy.  Before that novel – published as – serialized weekly magazine – 1950 A film adaptation of Ponniyin selvan novel was attempted by kamala Haasan and MGR and but it was unsuccessful.     Ponniyin selvan – Fiction movie based on novel This film is a created based on the famous Tamil novel Ponniyin selvan and directed by Mr. Maniratnam. That novel is a fiction story based on historical events among Chola dynasty in Tamilnadu and written by Kalki ramamoorthy.  Before that novel – published as – serialized weekly magazine – 1950 A film adaptation of Ponniyin selvan novel was attempted by kamala Haasan and MGR and but it was unsuccessful. ...

சார்லி 777 - திரைப்பட விமர்சனம்

Image
  இக்கதையின் மையக்கரு இந்த அமைப்பு விதித்திருக்கும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தன் மனதுக்கு சரியாக பட்டதை செய்யும் மனிதனுக்கும் மனிதனால் கேடு விளைவிக்கப்பட்டு தனியாய் திரியும் நாய்க்கும் இடையேயான பேரன்பை வெளிப்படுத்துகிறது. முதலில் இப்படிப்பட்ட கதைக்களத்தை தேர்வு செய்து படமாக்கிய இயக்குனருக்கு (கிரண் ராஜ் )வாழ்த்துக்கள். பொதுவாக ஒரு விலங்கினை கொண்டு நகரும் கதைக்கு ஒரு தனி ஆர்வம் இருக்கும் அதுபோலவே இக்கதைக்கும் இருந்தது .அதை கதைக்களம் பூர்த்தியும் செய்தது. பொதுவாக கதாநாயகன் ஒரு நல்லதை செய்யும் போது அதைக் கண்டு கதாநாயகி காதல் வயப்படுவதுண்டு. இதில் அவ்வாறு செய்யாமல் இருந்தது ரசிக்கும் படியாக இருந்தது. அதை அவள் அழகாக கையாண்ட படி தன் வேலையை செய்வாள். அந்த நாயின் உணர்வுகளை கேமரா மூலம் கடத்திய ஒளிப்பதிவாளரை பாராட்டியாக வேண்டும் பின்னணி இசை கதையின் உணர்வோட்டத்திற்கு மேலும் மெருகூட்டியது. உறவுகளின் பிரிவால் இறுகிபோய் இருக்கும் ஒரு மனதிற்கு சிறு அன்பை கொடுத்தலின் மூலம் அவனை பறந்த விரிந்த பிரபஞ்சத்தின் அழகினை அனுபவிக்க செய்கிறது அந்த நாய் சார்லி. " அதே அன்பு விட்டு பிரியும் நிலை வரும் போத...

திருமண வாழ்க்கையில் ஒரு வெற்றிதிறவுகொள்

Image
மண வாழ்க்கையின் வெற்றிக்கு திறவுகோல் -கமலநாதன்  பக்கங்கள் - 210  இந்தப் புத்தகம் மிக மோசமான அனுபவத்தையே தந்தது....  இந்த புத்தகம் சினிமாவில் காமம் குறித்தான காட்சியாக்கங்களை பற்றி ஒரு வன்மம்  இருந்திருக்கிறது என்பதால் அதை எதிர்த்து பதிவிட்டு இருக்கிறார். அது காமம் மட்டுமே வாழ்க்கை என கூறுகிறதாம். காமம் குறித்தான இருட்டடிப்பை நீக்குவதற்கே அவ்வாறான காட்சியாக்கங்கள் வைக்கப்படுகிறது. மனைவி ஒரு கணவனுக்கு தாயாக இருக்க வேண்டுமாம். அவ்வாறு வைக்கப்படும் போதே அவளை புனிதப்படுத்தி ஒடுக்கிறார்கள். அவள் ஒரு கணவனை மகனைப் போல நினைத்து மன்னிக்க வேண்டுமாம். மன்னிப்பதெல்லாம் சரி.  இரண்டாவது ஆண் செய்யும் தவறுகளை சிலவற்றையே சொல்கிறார். அதில் மனைவியை அடிப்பதை பற்றியும் குடிப்பழக்கத்தையும் பற்றி பேசியிருக்கிறார்.  நிறைய மனோதத்துவ அறிஞர்கள் கூறியிருப்பதாக பல உண்மைகளை எடுத்து சொல்வதாக எழுதியிருக்கிறார்.  ஆனால் அதற்கான ஆதாரப்பூர்வமான இணைப்பு எதையும் பின் இணைக்கவில்லை.  இந்த புத்தகத்தை ஒரு பெண் அடிமைத்தனத்தை பற்றி சிந்திக்காதவர்கள் படித்தால் இதை நம்பிக் கொண்டு அப்படியே பின்...

டோட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி- புத்தக விமர்சனம்

Image
  டோட்டா சான் ஜன்னலில் ஒரு சிறுமி ஆசிரியர் - டெட்சுகோ குரோயோநாகி பக்கங்கள் - 161  இந்த புத்தகத்தை எனது நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இது ஒரு உண்மைக் கதை. இந்த கதையின்  கதாநாயகியே இந்த புத்தகத்தை எழுதியுள்ளது தனிச்சிறப்பு. இதில் எனக்கு பிடித்த ஆசிரியர் கதாபாத்திரமான கோபயாக்ஷியே கதாநாயகன் என கூறலாம். இது ஜப்பானில் இருந்த டோமோயி பள்ளியைப்பற்றியும் அதில் படித்த சிறுமியை பற்றிய வரலாற்று கதை இது.  டோமோயி என்ற அந்த பள்ளியானது செயல்முறை கல்வியை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டுள்ளது. அந்த காலகட்டத்திலே மாணவர்கள் மீது எந்த வன்முறையும் இல்லாமல் பாடத்திணிப்பும் இல்லாமல் ஒரு கல்வி முறை இருந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. அக்கல்வி முறையில் படித்தவர்கள் சாதனையாளர்களாக விளங்கினர் என்பதை சாட்சியத்துடன் குறிப்பிட்டுள்ளனர். எனக்கு அதில் படித்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமே எனத் தோன்றியது. ஆனால் இந்தப் பள்ளி 1937 முதல் 1945 வரை மட்டுமே இருந்துள்ளது. அமெரிக்கா ஜப்பான் மீது தாக்குதல் நடத்தும்போது இந்தப் பள்ளியை விமானம் மூலம் தாக்கினர். பிறகு இம்மாதிரியான ஒரு பள்ள...

நட்சத்திரம் நகர்கிறது - திரைப்பட விமர்சனம்

Image
இந்தப் படம் நான் எதிர்பார்த்ததை போலவே commercial சினிமாவாக இல்லாமல் content பேசும் படமாக இருந்தது. இந்தப் படம்  சமூக சீர்கேடுகளை அதன் அக்கு வேறு ஆணிவேராக ஒவ்வொன்றையும் உரையாடல் படுத்தி இருப்பார் இயக்குனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது.  காதலில் ஒரு படிப்பினையும், பயணத்தையும் உருவாக்குகிறது.சமூகத்தின் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கிடையே உரையாடலை உருவாக்குகிறது. இப்படம் திருவாரூரில் முதல் நாள் முதல் காட்சி 11:00 மணிக்கே கிடைத்தது. இயக்குனர் Pa.Ranjith அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் (Yaazhi Films) பேரன்புகளும் வாழ்த்துக்களும். பெரும்பாலானோர் படம் மெதுவாக போவதாக சொல்கிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு காட்சியும் முக்கியம் என நினைக்கிறேன். விமர்சனம் தனிபட்டது என்பதால் எளிதாக எடுத்துக்கொள்ளலாம். அதுவும் படைப்புக்கு நலன் தரக் கூடியது தானே..  ஒரு 50 - 60 வயதுக்குள் இருப்பவர்களின் விமர்சனம் பற்றி அறிய ஆவலாக இருக்கிறது. கமர்ஷியல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக்கப்படுமா எனில் கேள்விக்குறிதான். அதைபோல இவர்களின் விமர்சனம் ஒன்றில் " படம் இன்னும் நல்லா எடுத்துறுக்கலாம் என சொன்...

புத்தக விமர்சனம் - சினிமா ஒரு காட்சி இலக்கியம்

Image
சினிமா ஒரு காட்சி இலக்கியம்  எழுத்தாளர் - ம.தொல்காப்பியன்  பக்கங்கள் - 127 சினிமாவை பற்றிய எதிர்மறைக் கருத்துகளை கொண்டவர்களும், சினிமாவை ரசிப்பவர்களும் தங்கள் கருத்துகளை வலுப்படுத்திக் கொள்ள கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் என நினைக்கிறேன். சினிமா ஒரு பொழுது போக்கு அல்ல. அது மக்களை பண்படுத்தும் ஒரு காட்சி இலக்கியம் என்பது இதனுடைய மையக்கருத்து.  மொழியின் ஆதார வடிவமான கூத்திலிருந்து நாடகம் பிறந்தது, அந்த நாடகம் அறிவியல் உபகரணங்களோடு புணர்ந்து பெற்றெடுத்த நட்சத்திர குழந்தைதான் சினிமா. எனவே சினிமாவும் மொழியின் இன்னொரு அலங்கார வடிவமே. அது போக பல சினிமாக்களின் காட்சிகளை எடுத்துரைத்து அதை அருமையாக விளக்கி இருப்பார். அதில் சில அபூர்வராகங்கள் நாயகன் ஆடுகளம் ஆகியன. ஒவ்வொரு தலைப்புகளையும் இன்னும் ஆராய்ந்து விரிவாக எழுதி அதை இன்னும் பெரிய புத்தகமாக கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.  சினிமாவை பற்றிய ஒரு தனித்துவமான பார்வையை கொண்டவராக இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஒரு முறை வாசித்தாலே புரிந்துவிடும். Kindle edition Rs.100. எனக்கு பிடித்த புத்தகம் இது. இதை என் நண்பருக்...

செருப்பை தின்கிறேன்- புத்தக விமர்சனம்

Image
கவிதையாசிரியர் - அழகு ஜெகன் இந்த புத்தகத்தின் தலைப்பும் அட்டைப்படமும் எனை படிக்க ஈர்த்தது. அதுபோக புத்தகத்தின் எழுத்தாளர் முகநூலில் நண்பராக அறிமுகம் ஆகி இருந்ததும் காரணம் என கூறலாம்.  இப் புத்தகத்தின் பல இடங்களில் பெரும்பான்மையான கவிதைகள் பால் புதுமை இன மக்களின் வலிகளை உணர்த்தியது. அதோடு மட்டுமல்லாமல் பெண்ணியம், தலித்தியம் என சேர்த்து இருப்பது கூடுதல் சிறப்பு.  இபுத்தகத்தை படித்த பிறகு பால்புதுமை இன மக்களை பற்றிய புரிதல் இன்னும் ஆழமாக கிடைத்திருக்கிறது. இதோடு சேர்த்து பால்மணம் புத்தகத்தையும் படித்துக் கொண்டிருந்தேன். இச்சமுகத்திற்கும் புரிதல் கிடைக்கும் என நம்புகிறேன். இப் பொதுச்சமூகம் செய்த தீண்டாமையின் பொருட்டு அவர்களை நோக்கி கேள்விகளை  ஆணித்தரமாக கேட்டிருக்கிறார்.  படிக்கும்போது பல தருணங்களில் எனை அறியாமல் எனது கண்ணீர் விடுதலை பெற்றுக் கொண்டது. இப்புத்தகத்தில் பல கவிதைகள் எனக்கு பிடித்திருந்தது. அவற்றுள் மிக மிக பிடித்த ஒன்று இது.  🌹இளஞ்சிவப்பு ரோஜாவே என் செத்த உடல் மீது ஏன் வந்து மலர்ந்து செத்து கிடக்கிறாய் ? உன்னையும் உன் அண்ணன் ஒன்பது என்று கேலி செய்தானா ...

புத்தக விமர்சனம் - கெட்ட வார்த்தை பேசுவோம்

Image
புத்தக எழுத்தாளர் - பெருமாள் முருகன் இந்த நூலின் தலைப்பே எல்லோரையும் வாசிக்க தூண்டும். அதுபோக என் நண்பரின் whatsapp எழுத்து மூலமாக அறிமுகம் கிடைத்தது. முதல் ஐந்து பக்கங்களை படித்து கொண்டிருக்கையில் ஆர்வம் மிக அதிகமாகி விட்டது. இந்த புத்தகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அல்குள் என்ற வார்த்தையை வைத்து விரிவாக எழுதப்பட்டிருக்கும். (அல்குள் - பெண்ணுறுப்பு). இன்றைக்கு சமூகம் பேசக்கூடாது என சொல்கிற வார்த்தைகளை அது கெட்ட வார்த்தை அல்ல அவ்வாறு ஆக்கப்பட்டு விட்டது என தகுந்த சான்றுகளோடு விளக்கமாக கொடுத்திருக்கிறார். இந்த வார்த்தைகள் என்னவென்றால் "புண்ட ,சுன்னி, தாயோலி, தூய்மை குண்டி முலை " போன்றவை மக்கள் பயன்படுத்தியவை தான். அதாவது மனித உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு வைத்த பெயர்கள்தான். அவை காலப்போக்கில் புது சொற்கள் வந்த பிறகு இவைகள் நாகரீகமற்றதாகவும் கெட்ட வார்த்தை ஆகவும் ஆக்கப்பட்டது.  மேலும் கம்பராமாயணத்தில் கம்பர் சீதையை வர்ணித்தவற்றை பற்றி படிக்கும் போது மிகுந்த ஆர்வமாக இருந்தது. கம்பரை பற்றியும் அண்ணாவைப் பற்றியும் இன்னொரு பார்வை நமக்கு நிச்சயமாக கிடைக்கும். நமது தமிழ் சமூகத்...

விக்ரம் - திரைவிமர்சனம்

Image
 விக்ரம் படம் எப்படி இருக்கு ?  ⚠️மு.குறிப்பு -  ஸ்பாய்லர் இல்லை.. இருந்தாலும் விமர்சனம் பிடிக்காதவர்கள் மட்டும் வாசிக்க வேண்டாம். அப்புறம் சூர்யா வரும்போது மட்டும்  சத்தம் அதிகமாக இருந்தது. இந்த ரெண்டு நிமிஷம் கத்துறதுக்காகவே வந்திருப்பாங்க போல ரசிகர்கள். சில ஆசாமிகள் படம் லேக் ஆக இருந்துச்சுனு சொல்ல கேட்டேன். போங்கடா டேய் அப்படின்னு சொல்லப்போனேன் பாருங்க... 🤣🤣 பாப்கார்ன் வாசனை இலுத்திருச்சி.... ஆண்டவர் நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும். மிக்க நன்று. விஜய் சேதுபதி நடிப்பை  ரசித்தேன். எப்படி ஒரு வில்லனாகவும் அவ்வப்போது காமெடியனாகவும் நடிக்க முடிகிறது. சூர்யா அவருக்குக் கொடுத்த நேரத்தில் அதிக பட்ச நடிப்பை கொடுத்திருக்கிறார். பகத் பாசில் அவருடைய கதாபாத்திரம் நன்றாகவே இருந்தது. அப்புறம் படத்துல நிறைய சஸ்பென்ஸ் இருக்கு. நான் சொன்னா என்ன கடிக்க வருவாங்க.... விஜய் சேதுபதி அடிக்கடி சோட்டா பீம் மாதிரி மாருராகிறார் 😂. அப்புறம் அவருடைய முந்தைய படத்தோட நிழல்  இதுல கொஞ்சம் தெரியும். மனுஷன் இப்படிப்பட்ட கதாபாத்திரம் கேட்டு வாங்குவார் போல. அப்புறம் ஒரு பெண் கதாப்பாத்...

தாம்பத்திய வழிகாட்டி - புத்தக விமர்சனம்

Image
நூல் - தாம்பத்திய வழிகாட்டி  ஆசிரியர் - டாக்டர் நாராயண ரெட்டி பக்கங்கள் - 184  இந்தப் புத்தகம் டாக்டர் விகடன் என்ற தொடரில் வெளியான இதழ்களின் முழுத் தொகுப்பு ஆகும். காமம் குறித்தான வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு டாக்டர் நாராயண ரெட்டி பதிலளித்துள்ளார்.  இந்திய கலாச்சாரத்தால் காமம் என்பது மறைத்து வைக்கப்பட வேண்டியதாகவும் பேசக்கூடாதாகவும் இருந்து வருகிறது.  விவாகம் முடிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே விவாகரத்து கோட்டில் நிற்கிற தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. இதைப் பார்த்தால் தம்பதிகளின் முழு சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டார்களா ? (வைத்தார்களா )என்ற கேள்வி எழுகிறது .  பதின்ம பருவத்தில் இருப்பவர்களுக்கு ரசாயன மாற்றத்தால் பாலியல் தேவை உண்டாகிறது. ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் காமம் குறித்தான பார்வை வேறு கோணத்தில் சென்றுவிடுகிறது.  இந்த புத்தகத்தை படித்த பிறகு எனக்கு ஒரு பாலியல் தெளிவை உண்டாக்கி இருக்கிறது. முதலில் கழிவறை இருக்கை புத்தகத்தை படித்த காரணத்தினால் காமம் குறித்த தவறான பிம்பம் உடைந்தது. பின் இந்நூலின் பாலியல் குறி...

KGF -2 திரைவிமர்சனம்

Image
  KGF chapter - 2   முதல் நாள் முதல் காட்சி பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். பொருளாதார வறுமையின் காரணமாகவும், நட்புகளின் அலட்சிய போக்கினாலும், தள்ளிப் போய்விட்டது. இன்று காலையில் ஆறு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து  எந்திரிச்சு எட்டு மணி ஷோ போய் பார்த்தாச்சு (ஒரு நண்பர் கூட மட்டும்). எதிர்பார்த்ததைவிட தரமா பண்ணி தந்திருக்கிறார் பிரசாந்த் நீல். 235 ரூபாய்(டிக்கெட்) க்கு தரமான கதைக்களம் இது. திரைக்கதை கொஞ்சம் கூட சலிப்பூட்ட கூடியதாக இல்லை. அதிலும் 19 வயது இளைஞர் குல்கர்னி அவரின் படத்தொகுப்பு மிகச் சிறப்பாக இருந்தது ❤️‍🔥❤️‍🔥. வயது என்பது எதையும் தீர்மானிக்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.  என்னுடைய நண்பர் அந்த படத்தில் காதல் பாடல் ஏன் வந்தது என கேட்டார். நான் சொன்னேன் அது இரு காட்சிகளை இணைப்பதற்கும், ஏமோஷனல் டச் காகத்தான். பாடல் முடிந்த அடுத்த தருணமே ஒரு அதிர்ச்சியான காட்சி இருக்கும். கதாநாயகி இறந்துவிடுவார்.  படத்தில் வில்லன் கதை முடிந்த பிறகும் கதைக்களம் செல்வது ஒரு டுவிஸ்ட் ஆக தான் இருந்தது. கிரடிட்ஸ் ஓடியவுடன் படம் அத்துடன் முடிந்து விட்டது என நினைத்த...

தாரை தப்பட்டை- திரைப்பட விமர்சனம்

Image
 வணக்கம் நேயர்களே !  இந்த படத்தை இப்பதான் பார்த்தீங்களா அப்படின்னு கேக்குறீங்க தானே ?   ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பார்த்த பிடிக்காமல் போன படமாக இருந்தாலும்... இன்னொரு கோணத்திலிருந்து பார்க்க தொடங்கினேன்...  பாரம்பரியக் கலைகளின் அழிவும், மக்களின் விருப்பமும் எவ்வாறு இருக்கிறது என்பதை ஒரு அருமையான ஒரு உரையாடலாக இயக்குனர் பாலா தந்துள்ளார். அதில் முக்கியமான பிடித்த காட்சிகளை பார்ப்போம்.  ஜோதிட நம்பிக்கைகளில் ஊறிப்போன சமுதாயத்தின் பார்வைக்கு பெரிய மனுஷனாக தெரியும் பணக்கார கதாபாத்திரம் ஒன்று. இந்த கதாபாத்திரம் நடத்தும் கேவலமான செயலின் மூலம் தனது சமூக மதிப்பை நிலைநாட்டுகிறார். அந்த கதாபாத்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பெண்களின் நலனுக்கு என்று அவர்களுக்கு பிடிக்காத ஒருவரை, முன்பின் தெரியாத ஒரு நபரை நம்பி திருமணம் செய்து வைப்பது எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை படம் காட்டுகிறது.வரலட்சுமியின் கதாபாத்திரம் ஒரு வெள்ளந்தியான ஏமாந்து போகிற கொஞ்சம் அடாவடியான கதாபாத்திரமாக இருக்கிறது. வரலட்சுமியின் நடிப்பு தாறுமாறு.🔥 சசிகுமாரின் நடிப்பு கொஞ்சம் இ...

சத்சங்கம் - புத்தக விமர்சனம்

Image
  நேயர்களே! இன்னைக்கு நாம பார்க்கப் போறது சத்சங்கம் - வெ.இறையன்பு அய்யா எழுதின புத்தகத்தை பற்றி தான். இந்தப் புத்தகமானது ஆத்திகத்துக்கும் நாத்திகத்திற்கு மான உரையாடலாகவும், விளக்க உரைகளாகவும் இருக்கின்றன. அதுபோக ஆன்மீகத்தைப் பற்றிய சரியான புரிதலும், குடும்ப சமுதாய அமைப்பில் பேரன்பு மலர செய்ய வேண்டியவைகளும் இருக்கின்றன. சுயதரிசன, சுய விமர்சன, சுயமுன்னேற்ற கலன்களை இயல்பாக தொட்டு விட்டு கடந்து செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது.  நாத்திகத்திற்கு ஆன்மிகத்திற்கும் தொடர்பு இல்லையா? என்கிற பல கேள்விகளை இனங்கண்டு அதற்கான தேடலை உருவாக்க வழிவகை செய்கிறது இந்த புத்தகம். சில அத்தியாயங்களில் சில கருத்துக்கள் சலிப்பூட்டுபவையாக இருந்தாலும், பல நல்ல கருத்துக்களும் தெளிவுகளும் இதில் இருக்கின்றன. வாசிப்பை நேசிப்போமாக ... இதைப்போன்ற அடுத்த விமர்சனத்தில் உங்களை சந்திக்கிறேன்...                         நன்றி! வணக்கம்.