சார்லி 777 - திரைப்பட விமர்சனம்
இக்கதையின் மையக்கரு இந்த அமைப்பு விதித்திருக்கும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தன் மனதுக்கு சரியாக பட்டதை செய்யும் மனிதனுக்கும் மனிதனால் கேடு விளைவிக்கப்பட்டு தனியாய் திரியும் நாய்க்கும் இடையேயான பேரன்பை வெளிப்படுத்துகிறது.
முதலில் இப்படிப்பட்ட கதைக்களத்தை தேர்வு செய்து படமாக்கிய இயக்குனருக்கு (கிரண் ராஜ் )வாழ்த்துக்கள்.
பொதுவாக ஒரு விலங்கினை கொண்டு நகரும் கதைக்கு ஒரு தனி ஆர்வம் இருக்கும் அதுபோலவே இக்கதைக்கும் இருந்தது .அதை கதைக்களம் பூர்த்தியும் செய்தது. பொதுவாக கதாநாயகன் ஒரு நல்லதை செய்யும் போது அதைக் கண்டு கதாநாயகி காதல் வயப்படுவதுண்டு. இதில் அவ்வாறு செய்யாமல் இருந்தது ரசிக்கும் படியாக இருந்தது. அதை அவள் அழகாக கையாண்ட படி தன் வேலையை செய்வாள். அந்த நாயின் உணர்வுகளை கேமரா மூலம் கடத்திய ஒளிப்பதிவாளரை பாராட்டியாக வேண்டும் பின்னணி இசை கதையின் உணர்வோட்டத்திற்கு மேலும் மெருகூட்டியது.
உறவுகளின் பிரிவால் இறுகிபோய் இருக்கும் ஒரு மனதிற்கு சிறு அன்பை கொடுத்தலின் மூலம் அவனை பறந்த விரிந்த பிரபஞ்சத்தின் அழகினை அனுபவிக்க செய்கிறது அந்த நாய் சார்லி. " அதே அன்பு விட்டு பிரியும் நிலை வரும் போதும் மற்றொரு அன்பினை கொடுத்து அதை ஈடு செய்கிறது. இப்படத்தின் இறுதிக்காட்சியில் நம்மை அழ வைத்து விடுகிறார்கள். அவ்வலுகைக்குப்பின் ஒரு பெருமூச்சும் விட செய்கிறார்கள். அன்பு என்னவெல்லாம் செய்யும், எவ்வளவு தூரம் நம்மளை இழுத்துச் செல்லும் என்பதை அழகாக காண்பித்து இருக்கிறது. இவ்வுலகில் அனாதை என்று யாருமே இல்லை என இத்திரைக்கதை எனக்கு உணர்த்தியது. இப்படத்தை பற்றிய உங்களது அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment