தாரை தப்பட்டை- திரைப்பட விமர்சனம்


 வணக்கம் நேயர்களே ! 

இந்த படத்தை இப்பதான் பார்த்தீங்களா அப்படின்னு கேக்குறீங்க தானே ?  

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பார்த்த பிடிக்காமல் போன படமாக இருந்தாலும்... இன்னொரு கோணத்திலிருந்து பார்க்க தொடங்கினேன்... 

பாரம்பரியக் கலைகளின் அழிவும், மக்களின் விருப்பமும் எவ்வாறு இருக்கிறது என்பதை ஒரு அருமையான ஒரு உரையாடலாக இயக்குனர் பாலா தந்துள்ளார். அதில் முக்கியமான பிடித்த காட்சிகளை பார்ப்போம்.

 ஜோதிட நம்பிக்கைகளில் ஊறிப்போன சமுதாயத்தின் பார்வைக்கு பெரிய மனுஷனாக தெரியும் பணக்கார கதாபாத்திரம் ஒன்று. இந்த கதாபாத்திரம் நடத்தும் கேவலமான செயலின் மூலம் தனது சமூக மதிப்பை நிலைநாட்டுகிறார். அந்த கதாபாத்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பெண்களின் நலனுக்கு என்று அவர்களுக்கு பிடிக்காத ஒருவரை, முன்பின் தெரியாத ஒரு நபரை நம்பி திருமணம் செய்து வைப்பது எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை படம் காட்டுகிறது.வரலட்சுமியின் கதாபாத்திரம் ஒரு வெள்ளந்தியான ஏமாந்து போகிற கொஞ்சம் அடாவடியான கதாபாத்திரமாக இருக்கிறது. வரலட்சுமியின் நடிப்பு தாறுமாறு.🔥 சசிகுமாரின் நடிப்பு கொஞ்சம் இந்த படத்தில் எனக்கு பிடித்து இருந்தது. ஆனாலும் இன்னும் முயற்சி செய்து இருக்கலாம். படத்தில் வரும் அனேக உரையாடல்கள், வசனங்கள் அருமையானவை. 


அப்படி இருந்தாலும் கூட சில கேலி எனும் முகமூடிக்குள் மறைந்துகிடக்கும் அடக்குமுறையை காட்சி அமைக்காமல் இருந்திருக்கலாம். காதலர்களுக்கு Posessiveness, மற்றும் அக்கறைக்கும் காதலுக்கும் உண்டான வேறுபாட்டை தெரிய வைப்பதர்காக சில காட்சிகள் அமைத்த விதம் அருமை.  

கிளைமாக்ஸில் போடப்பட்ட அந்த பக்தி மயமான இசையமைப்பு கொஞ்சம் சகிக்க முடியாததாக இருந்தது... 

இறுதியாக நடிப்பு, திரைக்கதை, வசனம் ஆகியவை பிடித்திருந்தது..

கருத்தை பகிர்ந்ததில் மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களையும் கீழே கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். 

இதைப் போன்றதொரு அடுத்த பட விமர்சனத்தில் உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம் ! 

Comments

Popular posts from this blog

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1