விக்ரம் - திரைவிமர்சனம்
விக்ரம் படம் எப்படி இருக்கு ?
⚠️மு.குறிப்பு - ஸ்பாய்லர் இல்லை.. இருந்தாலும் விமர்சனம் பிடிக்காதவர்கள் மட்டும் வாசிக்க வேண்டாம்.
அப்புறம் சூர்யா வரும்போது மட்டும் சத்தம் அதிகமாக இருந்தது. இந்த ரெண்டு நிமிஷம் கத்துறதுக்காகவே வந்திருப்பாங்க போல ரசிகர்கள். சில ஆசாமிகள் படம் லேக் ஆக இருந்துச்சுனு சொல்ல கேட்டேன். போங்கடா டேய் அப்படின்னு சொல்லப்போனேன் பாருங்க... 🤣🤣 பாப்கார்ன் வாசனை இலுத்திருச்சி....
ஆண்டவர் நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும். மிக்க நன்று. விஜய் சேதுபதி நடிப்பை ரசித்தேன். எப்படி ஒரு வில்லனாகவும் அவ்வப்போது காமெடியனாகவும் நடிக்க முடிகிறது. சூர்யா அவருக்குக் கொடுத்த நேரத்தில் அதிக பட்ச நடிப்பை கொடுத்திருக்கிறார். பகத் பாசில் அவருடைய கதாபாத்திரம் நன்றாகவே இருந்தது. அப்புறம் படத்துல நிறைய சஸ்பென்ஸ் இருக்கு. நான் சொன்னா என்ன கடிக்க வருவாங்க....
விஜய் சேதுபதி அடிக்கடி சோட்டா பீம் மாதிரி மாருராகிறார் 😂. அப்புறம் அவருடைய முந்தைய படத்தோட நிழல் இதுல கொஞ்சம் தெரியும். மனுஷன் இப்படிப்பட்ட கதாபாத்திரம் கேட்டு வாங்குவார் போல. அப்புறம் ஒரு பெண் கதாப்பாத்திரம் உண்மையிலேயே சஸ்பென்ஸாக இருந்தது. அப்புறம் கேப்டன் ஆப் த ஷிப் லோகேஷ் அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மனுஷன் எதிர்பார்த்ததை தந்துவிட்டார். இப்படத்தின் திரைக்கதை உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
அப்ரம் ஒளிப்பதிவு கிரிஷ் கங்காதரன் சிறப்பாக பண்ணியிருந்தார். அதுலயும் அந்த பெரியம்மாவை (துப்பாக்கியை) விக்ரம் இயக்கும்போது ஒரு ஸ்லோ மோஷன் ஷாட் இருக்குமே 😍🔥🔥. படத்தொகுப்பு, இசை , கலை இயக்கம் எல்லாமே படத்துக்கு கூடுதல் பிளஸ் தான். படத்தோட நெகட்டிவ் சொல்லனும்னா ரீனா கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்னு தோணுச்சு. ஆனா படத்தோட நேரக் கணக்கு இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ❤️💙 தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்தான். உங்களுடைய கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்...
நன்றி நேயர்களே...
#VikramMovie #VikramFromJune3 #vikramreview #moviereviewer
Comments
Post a Comment