புத்தக விமர்சனம் - சினிமா ஒரு காட்சி இலக்கியம்
சினிமா ஒரு காட்சி இலக்கியம்
எழுத்தாளர் - ம.தொல்காப்பியன்
பக்கங்கள் - 127
சினிமாவை பற்றிய எதிர்மறைக் கருத்துகளை கொண்டவர்களும், சினிமாவை ரசிப்பவர்களும் தங்கள் கருத்துகளை வலுப்படுத்திக் கொள்ள கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் என நினைக்கிறேன். சினிமா ஒரு பொழுது போக்கு அல்ல. அது மக்களை பண்படுத்தும் ஒரு காட்சி இலக்கியம் என்பது இதனுடைய மையக்கருத்து.
மொழியின் ஆதார வடிவமான கூத்திலிருந்து நாடகம் பிறந்தது, அந்த நாடகம் அறிவியல் உபகரணங்களோடு புணர்ந்து பெற்றெடுத்த நட்சத்திர குழந்தைதான் சினிமா. எனவே சினிமாவும் மொழியின் இன்னொரு அலங்கார வடிவமே. அது போக பல சினிமாக்களின் காட்சிகளை எடுத்துரைத்து அதை அருமையாக விளக்கி இருப்பார். அதில் சில அபூர்வராகங்கள் நாயகன் ஆடுகளம் ஆகியன. ஒவ்வொரு தலைப்புகளையும் இன்னும் ஆராய்ந்து விரிவாக எழுதி அதை இன்னும் பெரிய புத்தகமாக கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
சினிமாவை பற்றிய ஒரு தனித்துவமான பார்வையை கொண்டவராக இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஒரு முறை வாசித்தாலே புரிந்துவிடும். Kindle edition Rs.100. எனக்கு பிடித்த புத்தகம் இது. இதை என் நண்பருக்கு பரிசாகவும் கொடுத்துள்ளேன்.
நன்றி !
Comments
Post a Comment