புத்தக விமர்சனம் - கெட்ட வார்த்தை பேசுவோம்


புத்தக எழுத்தாளர் - பெருமாள் முருகன்

இந்த நூலின் தலைப்பே எல்லோரையும் வாசிக்க தூண்டும். அதுபோக என் நண்பரின் whatsapp எழுத்து மூலமாக அறிமுகம் கிடைத்தது. முதல் ஐந்து பக்கங்களை படித்து கொண்டிருக்கையில் ஆர்வம் மிக அதிகமாகி விட்டது. இந்த புத்தகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அல்குள் என்ற வார்த்தையை வைத்து விரிவாக எழுதப்பட்டிருக்கும். (அல்குள் - பெண்ணுறுப்பு). இன்றைக்கு சமூகம் பேசக்கூடாது என சொல்கிற வார்த்தைகளை அது கெட்ட வார்த்தை அல்ல அவ்வாறு ஆக்கப்பட்டு விட்டது என தகுந்த சான்றுகளோடு விளக்கமாக கொடுத்திருக்கிறார். இந்த வார்த்தைகள் என்னவென்றால் "புண்ட ,சுன்னி, தாயோலி, தூய்மை குண்டி முலை " போன்றவை மக்கள் பயன்படுத்தியவை தான். அதாவது மனித உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு வைத்த பெயர்கள்தான். அவை காலப்போக்கில் புது சொற்கள் வந்த பிறகு இவைகள் நாகரீகமற்றதாகவும் கெட்ட வார்த்தை ஆகவும் ஆக்கப்பட்டது. 


மேலும் கம்பராமாயணத்தில் கம்பர் சீதையை வர்ணித்தவற்றை பற்றி படிக்கும் போது மிகுந்த ஆர்வமாக இருந்தது. கம்பரை பற்றியும் அண்ணாவைப் பற்றியும் இன்னொரு பார்வை நமக்கு நிச்சயமாக கிடைக்கும். நமது தமிழ் சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு அடிக்கடி பேசப்படுகிறது. அதற்கு முன்னர்     குழுச்சமூகமாக வாழ்ந்தது பற்றியும் சிலவற்றை சொல்லி இருக்கிறார். அதுபோக சி.என்.அண்ணாதுரை எழுதிய கம்பரசம் என்ற நூலின் அறிமுகமும் அதைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களும் கிடைத்தது. கம்பராமாயணத்தின் செய்யுளுக்கும் அதை வைத்து எழுதப்பட்ட விளக்க உரைக்கும் உள்ள முரண்களை சுட்டி காட்டி இருந்தார் ஆசிரியர். அந்த வேலையை செய்தது பதிப்பாசிரியர்கள், விளக்க உரையாளர்களும் தான் எனவும், அதை ஒழுக்க கோட்பாட்டுக்காகவும்  தமிழ் இலக்கியத்தின் மதிப்பு குறைந்து விடக்கூடாது எனவும் செய்திருக்கிறார்கள். தமிழின் பெருமை பேசும் சில பெயர்கள் இம்மாதிரியான முரன்களையோ குறைகளையோ ஆராய்வதில்லை.

 இதில் இறுதி கட்டுரையாக ஆ. இரா. வெங்கடாசலபதி எழுதிய பத்திகள் வரும். அதில் கெட்ட வார்த்தைகளில் வரும் சாதிய ரீதியான இழி சொற்கள் வருவது இயல்பே என கூறியிருப்பார். அது எனக்கு தவறாக தெரிந்தது. அதை இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. மற்றபடி சில நல்ல தகவல்களையும் தந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாதது. அதில் ஒன்று, 


'பனங்கிழங்கை பிளந்தது போன்ற அலகை உடைய நாரை' என்று உவமை சொன்ன சத்திமுற்றுப்  புலவரை அந்த உவமைக்காகவே போற்றும் தமிழ் இலக்கிய உலகம், '"மரத்தில் தொங்கும் கிழட்டு வவ்வால் போன்ற அல்குல் (பெண்ணுறுப்பு)" என உவமை சொன்ன திருவேங்கட நாதரை ஏன் கொண்டாடவில்லை?. இந்த உவமையை பற்றிய பேச்சே இல்லையே ! என்ன பாரபட்சம் ! பொருத்தமான உவமையை சொன்ன போதும் பேசிய விஷயத்தின் காரணமாக ஒருவர் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். ஆயிரம் அல்குல் மனதில் தொங்கினாலும் அவை மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று மறைக்கும் மூடுண்ட சமூகம் நமது. எதுவும் இருக்கலாம் ஆனால் மறைவாக என்று வலியுறுத்தும் மனோபாவம் கொண்டவர்கள் நாம். இதுதான் நம் சூழல்.

🤔அப்போ 'புண்ட' அப்படிங்கிற வார்த்தையும் கெட்ட வார்த்தை இல்லையா ? அப்படின்னு கேட்க தோணிச்சு... 


எங்கள் ஊரில் பயன்படுத்தும் பழமொழிகளிலும் வசைச் சொற்களிலும் சிலவற்றை இப்புத்தகத்தில் காண முடிந்தது. அதை மிகச் சரியாகவும் கூறியிருந்தார்கள். எடுத்துக்காட்டாக, சண்டாளன் எனும் வார்த்தை அர்த்தம் சாதிய கலப்பில் பிறந்தவன். இத்தனை நாள் வரைக்கும் இதை நான் இழி சொல் என நினைத்தேன். இப்போது அந்த வார்த்தை உபயோகப்படுத்திய என்னை அழைத்தால் எனக்கு பெருமையே... 


ஆனால் அல்குள் பற்றிய நிறைய கட்டுரைகள் சங்க இலக்கியத்திலும் இப்புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஆண் இனப்பெருக்க உறுப்பை பற்றி அதிலும் சரி இதிலும் சரி பெரிதாக எழுதப்படவில்லை.இறுதியாக இப்புத்தகம் பல நாட்களாக ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டது. ஆங்கில ஆராய்ச்சி இதழ்களில் வரும் கெட்ட வார்த்தைகளை பற்றிய ஆய்வுகளைப் போல் தமிழ் ஆராய்ச்சி இதழ்களில் ஒன்று கூட இல்லை என சொல்கிறார். இனி மாதிரியான ஆயுதங்கள் வர பெருமாள் முருகனின் இப்புத்தகம் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என நம்புவோம். அல்குலைக் கொண்டாடுவோம்... வாசியுங்கள் பிரண்ட்ஸ்....

Comments

Popular posts from this blog

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1