சத்சங்கம் - புத்தக விமர்சனம்
நேயர்களே! இன்னைக்கு நாம பார்க்கப் போறது சத்சங்கம் - வெ.இறையன்பு அய்யா எழுதின புத்தகத்தை பற்றி தான்.
இந்தப் புத்தகமானது ஆத்திகத்துக்கும் நாத்திகத்திற்கு மான உரையாடலாகவும், விளக்க உரைகளாகவும் இருக்கின்றன. அதுபோக ஆன்மீகத்தைப் பற்றிய சரியான புரிதலும், குடும்ப சமுதாய அமைப்பில் பேரன்பு மலர செய்ய வேண்டியவைகளும் இருக்கின்றன. சுயதரிசன, சுய விமர்சன, சுயமுன்னேற்ற கலன்களை இயல்பாக தொட்டு விட்டு கடந்து செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது.
நாத்திகத்திற்கு ஆன்மிகத்திற்கும் தொடர்பு இல்லையா? என்கிற பல கேள்விகளை இனங்கண்டு அதற்கான தேடலை உருவாக்க வழிவகை செய்கிறது இந்த புத்தகம். சில அத்தியாயங்களில் சில கருத்துக்கள் சலிப்பூட்டுபவையாக இருந்தாலும், பல நல்ல கருத்துக்களும் தெளிவுகளும் இதில் இருக்கின்றன. வாசிப்பை நேசிப்போமாக ...
இதைப்போன்ற அடுத்த விமர்சனத்தில் உங்களை சந்திக்கிறேன்...
நன்றி! வணக்கம்.
Comments
Post a Comment