KGF -2 திரைவிமர்சனம்



 


KGF chapter - 2 


 முதல் நாள் முதல் காட்சி பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். பொருளாதார வறுமையின் காரணமாகவும், நட்புகளின் அலட்சிய போக்கினாலும், தள்ளிப் போய்விட்டது. இன்று காலையில் ஆறு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து  எந்திரிச்சு எட்டு மணி ஷோ போய் பார்த்தாச்சு (ஒரு நண்பர் கூட மட்டும்). எதிர்பார்த்ததைவிட தரமா பண்ணி தந்திருக்கிறார் பிரசாந்த் நீல். 235 ரூபாய்(டிக்கெட்) க்கு தரமான கதைக்களம் இது. திரைக்கதை கொஞ்சம் கூட சலிப்பூட்ட கூடியதாக இல்லை. அதிலும் 19 வயது இளைஞர் குல்கர்னி அவரின் படத்தொகுப்பு மிகச் சிறப்பாக இருந்தது ❤️‍🔥❤️‍🔥. வயது என்பது எதையும் தீர்மானிக்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 


என்னுடைய நண்பர் அந்த படத்தில் காதல் பாடல் ஏன் வந்தது என கேட்டார். நான் சொன்னேன் அது இரு காட்சிகளை இணைப்பதற்கும், ஏமோஷனல் டச் காகத்தான். பாடல் முடிந்த அடுத்த தருணமே ஒரு அதிர்ச்சியான காட்சி இருக்கும். கதாநாயகி இறந்துவிடுவார். 

படத்தில் வில்லன் கதை முடிந்த பிறகும் கதைக்களம் செல்வது ஒரு டுவிஸ்ட் ஆக தான் இருந்தது. கிரடிட்ஸ் ஓடியவுடன் படம் அத்துடன் முடிந்து விட்டது என நினைத்து பார்வையாளர்கள் எல்லாம் வெளியே சென்றார்கள் 😂😂.ஆனால் அதற்கப்புறமும் ஒரு காட்சி  இருக்கும். அது கதைத்தொடர்ச்சியைத் தெரிந்து கொள்வதற்கான டிவிஷ்ட் காட்சி. நான் படம் முடிந்து கிரடிட்ஷ் முடியும் வரை அமர்ந்திருந்தென். இருக்கையை விட்டு வெளியே செல்ல மனமில்லை என்பதும் காரணம். கதை எனக்குள் உருவாக்கிய தாக்கம் தான் அது. படம் முடியும் வரை டிவிஸ்ட்டோ டுவிஸ்ட் தான். 🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥 பெரிய திரையில் பாருங்கள் 😍😍

நன்றி நேயர்களே...  


Comments

Popular posts from this blog

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1