Posts

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

  தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே , வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே , மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் , மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே , சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே . யாதும் ஊரே யாவரும் கேளிர் -       கணியன்   பூங்குன்றன்  பொருள்   நன்மை தீமை மற்றவரால் வருவதில்லை துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை மரணித்தல் புதுமையில்லை ; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை. மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பொழிந்து பெ ரிய  ஆ ற்றில் ஓடும் படகுபோல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று முன்னோடிகள் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆதலினால் , சி றியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை....

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

Image
      குறிஞ்சி (மலைப்பகுதி) நிலத் தெய்வமான சேயோன் தான் முருகன் (முருகு = அழகு) என தொல்காப்பியர் கூறுகிறார்.  முருகன் எனும் பெருந்தெய்வம் தமிழ் பேசும்  மக்களின் தலைவராக இருந்து போரில் தன் மக்களை காத்தவர் ஆவார்.  ஆகையால், இன்று உலகம் முழுவதிலும் வசிக்கும் தமிழர்கள் முருகனை வழிபடுகின்றனர். (பேரா.ரவீந்திரன் அவர்களின் உரையிலிருந்து) ஸ்கந்தன், சுப்பிரமணியன் போன்ற ஆரிய கடவுள்களோடு சேர்த்து முருகனின் தோற்றத்தை வைதீக மதவாதிகள் மாற்றிவிட்டார்கள். அத்தோடு அவருக்கு தேவசேனா மனைவி எனவும், சிவன் மற்றும் பார்வதி பெற்றோர் எனவும் வைதீக மதவாதிகள் எழுதி பரப்புரை செய்தனர். ஏனென்றால், தமிழ் மக்களின் பெருந்தெய்வமான (deity) முருகனை ஆரியக் கடவுள்களின் குடும்பத்தைச் சேர்ந்த தேவசேனாவின் கணவர் எனக் கூறியதின் மூலம், முருகனை இந்து மதத்திற்குள் கொண்டு வர முடிந்தது. அவ்வாறு தமிழ்மக்களுக்கே உரிய பண்பாட்டினையும், (culture and communication) மரபையும், வரலாற்றையும்  மடைமாற்றி அதன் மூலம் ஆதாயத்தைத் (benefit) தேடிக்கொண்டனர்.  இந்து வைதீக மதவாதிகளின் கதைப்படி, முருகனின் பெற்றோரான சிவன்...

தெய்வ வழிபாடும், சாதியும், வர்க்கமும்- 3

Image
கடந்த பாகத்தில் ஆண் தெய்வங்களின் கதை மற்றும் வழிபாட்டு முறையைப் பார்த்தோம். இப்போது பாப்பாத்தி அம்மன் எனும் பெண் தெய்வத்தின் கதையை பார்ப்போம்.  இந்த பாப்பாத்தி அம்மன் இடைநிலை சாதியினரின் (நிலக்கிழார் - land lords)  கூட்டு சதியால் பாலியல் சுரண்டலுக்கு (sexual exploitation) ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வாய்வழிக் கதைகள் கூறுகின்றன. இந்த பெண் இணையரின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பெண் திரும்ப பேயாக வந்து தொந்தரவு தருவதாக எழுந்த பயத்தின் பேரில் பாப்பாத்தி அம்மன் தெய்வமாக ஆக்கப்பட்டார். ஏனென்றால், இந்தப் பெண் தெய்வத்தின் கோவில் கொடை விழாவை ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே நடத்துகின்றனர். இந்த மாதிரி ஒவ்வொரு தெய்வங்களின் வழிபாட்டிற்கு பின்னால் நிலவுடைமை மற்றும் ஆணாதிக்க சமூகத்தின் பல வரலாற்று நிகழ்வுகள் இருக்கும் என்பது தொடர்பியல் மானுடவியல் பார்வையில் நமக்கு புலனாகிறது. இந்தக் கதைகள் ஆராய்ச்சியாளருக்கு வில்லுப்பாட்டு, வாய் வழி கதைகள் மற்றும் மூத்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது.  இந்த ஊரின் கன்னிமார் கோவிலின் வழிபாட்டு முறை பிராமணியத் ...

தெய்வ வழிபாடும், சாதியும், வர்க்கமும்- 2

Image

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1

Image
    முதலில் சிறு தெய்வம் என்ற சொல்லின் தோற்றத்தை நோக்குவோம். "சென்று நாம் சிறு தெய்வம் சேரோம் அல்லோம்" என்று அப்பர் தேவாரத்தில் பயின்று வருகிறது. இதன் காலம் கிபி ஏழாம் நூற்றாண்டு ஆகும். இதற்கு நேர் மாறாக பெருந்தெய்வம் என்ற சொல் வழக்கு புறநானூற்றிலேயே காணப்படுகிறது. 2 வேந்தர்களையும் ஒன்றாக கண்ட புலவர், இரு பெரும் தெய்வமும் உடன் நின்றா அங்கு" என்று பலராமனையும் திருமாலையும் நினைத்து பாடுகிறார். எனவே சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வழிபடும் கடவுளரைச் சிறு தெய்வங்கள் எனவும், மேல் தட்டுமக்கள் வழிபடும் தெய்வங்களை பெருந்தெய்வம் எனவும் குறிப்பிடும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்திருப்பதாக தெரிகிறது.  ஆய்வு நெறியில் சிறு தெய்வம், பெருந்தெய்வம் என்ற சொற்களை தாழ்ந்தவை உயர்ந்தவை என்ற பொருளில் எடுத்துக் கொள்ள இயலாது. உண்மையில் சிறு தெய்வங்கள் எனப்படுபவையே மிக பழைய நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பேணி நிற்பவையாகும். கட்டுரையில் சிறு தெய்வம் என்ற சொல் நாம் பழகிவிட்ட சொல் என்பதனாலேயே எடுத்தாளப்படுகிறது.    சிறு தெய்வம் என்ற சொல் எதைக் குறிக்கும்?  சிறு தெய்வங்களின் முதற்பண்பு அவ...

சலனச் சித்திரங்களில் சமூகம் - புத்தக விமர்சனம்

Image
சினிமா என்பது இன்றைய மனிதர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அது ஒரு பக்கம் மானுடவியல், பண்பாடு, இயங்கியல், கலைகள் என பல பரிமாணங்களைக் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ஆனால், மற்றொரு பக்கம் சில திரைப்படங்கள் வணிக நோக்கில் மனிதர்களின் பணம் மற்றும் நேரத்தை விழுங்குகிறது.  இத்தைகைய சூழலில் வெகுசன மக்களால் கொண்டாடப்பட்டு தமிழில் வெளியாகி சில விமர்சனங்களை பெற்ற திரைப்படங்களை பற்றிய தனது காட்டமான விமர்சனத்தை வாழ்வியல், உளவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வோடு எழுதியுள்ளார். இரண்டாவது பகுதியாக சில மலையாள திரைப்படங்களையும், அவர்களின் இன ரீதியான காட்சியமைப்பு அணுகுமுறைகளையும், தனித்துவ கலை படைப்பைகளையும் நம்முன் எடுத்து வைக்கிறார். சினிமா உலகின் வெகு வேகமான உற்பத்தி வளர்ச்சியில் மறைந்து போன சில காவியங்கள் பற்றிய அறிமுகமும், அவற்றின் மீதான பல கோணப் பார்வையையும் நமக்கு எழச் செய்கிறார்.  சத்யஜித் ரேயின் காலம் தாண்டி நிற்கும் கலைப்படைப்புகளையும், அவை சொல்லும் மானுட வாழ்வியல் கதைகளையும் அறிமுகப் படுத்துகிறார்.  வாசிக்கும் போக்கில் சில வாக்கிய பிழைகள் இருப்பது அயர்ச்ச...

இக்கிகய் - புத்தக விமர்சனம்

Image
இக்கிகய் - நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான ஜப்பானிய ரகசியம் எழுதியவர்கள் - ஹெக்டேர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்  பக்கங்கள் - 206  இப்புத்தகம் விற்பனையில் உலக சாதனை படைத்த, தமிழில் மொழி பெயர்த்த ஒரு கட்டுரை தொகுப்பு. இக்கி கய் என்பது நம் வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழவைக்கும் நம்மிடமுள்ள காரணியாகும். இப்புத்தகத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றியும் விரிவாக எழுதப்பட்டிருக்கும்.  உலகிலேயே மிக நீண்ட ஆயுளை (122 வயது) கொண்டவர்களில் அதிகமானோர் ஜப்பானில் உள்ள ஒகிமி எனும் ஊரில் வசிக்கின்றனர். ஆக அவர்கள் அந்த நகரத்தில் இருப்பவர்கள் மட்டும் எப்படி நீண்ட ஆயுளை பெறுகிறார்கள் எனும் உண்மையை தேடும் வேட்கையில் இந்நூலை எழுதிய ஆசிரியர்கள் அங்கு தேடிச் செல்கின்றனர். அவர்கள் பயணத்தின் மூலம் கிடைத்த ஞானத்தை ஒரு புத்தகமாக எழுத முற்பட்டு அவற்றை ஒரு குறிப்புகளாக எழுதிக் கொண்டே வந்துள்ளனர். அவற்றில் நீண்ட ஆயுளை அடைவதற்கு செய்ய வேண்டியவைகளாக உடற்பயிற்சி, நல்ல உணவு, நல்ல தத்துவம் , இக்கிகயை கண்டுபிடிப்பது, மீண்டு எழுவது, மன...

பத்மநாபா படுகொலை - ஜெ. ராம்கி

Image
பத்மநாபா படுகொலை எழுதியவர் - ஜெ. ராம்கி பக்கங்கள் - 136 சுவாசம் பதிப்பகம்  விலை - 160 ரூ  இது ஒரு சுவாரசியம் நிறைந்த ஒரு உண்மை வரலாறு. இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமா என கற்பனை கூட செய்து கொள்ள முடியாது.  ஆனால் 1990களில் நடந்த இச்சம்பவம் தமிழ்நாட்டையே உளுக்கியது. மேலும், தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே மாற்றி போட்டது என்றாலும் மிகையாகாது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் பத்மநாபாவைப் பற்றி எனக்கு அறிமுகமே கிடையாது. இதைப் படித்த பின்பு இப்படி ஒரு வரலாற்று நிகழ்வை எப்படி காட்சியாக ஆவணப்படுத்தாமல், பெரிதாக பேசாமல் இருந்தார்கள் எனக் கவலையாக இருந்தது. ஏனென்றால் நமக்குத் தெரிந்த தமிழ்நாடு அரசியலைத் தாண்டி புது பார்வையைத் தருகிறது. இனி அந்நிகழ்வு எவ்வாறு நடந்தது எனப் சுருக்கமாக பார்க்கலாம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுத்த பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட கதை. பத்மநாபா ஈழத்த தமிழர் விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்தி முதலில் போராடினாலும், பிற்காலத்தில் அவருக்கு கிடைத்த உலகளாவிய அரசியல் புரிதல்களினால் ஜனநாயக முறையை தேர்ந்தெடுத்தார். இதன் மூலமாக ஏற...

சென்னையில் ஒரு சம்பவம்

Image
  இன்னைக்கு சாயங்காலம் சென்னை அசோக் நகர் பக்கத்துல நடந்து வந்துட்டு இருக்குறப்ப ஒரு சம்பவம் நடந்துகிட்டு இருந்தது. சரி என்னடா நடக்குதுன்னு நின்னு பார்ப்போம் என கவனிச்சேன். கடவுள் பெயரை சொல்லி காசு கொடுத்து ஏமாந்து போன ஒரு தம்பதி நின்னுட்டு இருந்தாங்க. அந்த பக்கம் ஒரு குறி சொல்ற பெண் நின்னுகிட்டு இருந்தாங்க.  இந்த குறி சொல்ற பெண் அவங்க கிட்ட ஏதேதோ சொல்லி 2000 ரூபாய் வாங்கிட்டு பட்ட நாமத்த போட்டுட்டாங்க. காச இழந்த இந்த தம்பதி அதை எப்படிடா வாங்குவது என்று வாதாடிட்டு இருக்காங்க. ஒரு கட்டத்துல காச இழந்த அந்த ஆண் அவர் வைத்திருந்த நாக உருவ சிலையை எடுத்துக்கிட்டு வந்தாரு. உடனே அந்த குறி சொல்ற பெண் இதை எடுத்துக்கிட்டு போனா, 'அதுக்கு தகுந்த மாதிரி அனுபவிப்ப அப்படின்னு சொல்லுது'. நான் அனுபவிச்சா அனுபவிச்சிட்டு போறேன். ஆனா காசு இழந்தவர் மனைவி எதுக்கு நமக்கு இது, அதை போட்டுட்டு வந்துருங்க அப்படின்னு சொல்லுறாங்க. அவங்களுக்குள்ளே ஒரு சின்ன கடவுள் பயம் எட்டிப் பார்க்கிறத கவனிச்சேன்.  அந்த நாக சிலையை திருப்பி போட்டுட்டு நீ நாசமா போய்டுவ உன் குடும்பமே விளங்காமல் போய்விடும் அப்படி இப்படின்ன...

பூப்பு - மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும்

Image
  பூப்பு  மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும் எழுதியவர் - ரேணுகா தேவி பக்கங்கள் - 48 இந்த புத்தகம் மாதவிலக்கு சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்களையும் மருத்துவ ஆலோசனைகளையும் தருவதாக இருக்கிறது. முதலில் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தற்காக ஆசிரியருக்கும் படைப்பிற்கும் வரவேற்பை அளிக்க வேண்டும்.  இது பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என எழுதியிருந்தது. ஆனால், இதை அனைத்து பாலினத்தாரும் வாசிக்க வேண்டியற்றுள் ஒன்று. புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை இக்குழுவில் பார்த்தேன். வெகு நாட்களுக்கு முன்பாகவே இதை வாசிக்கனும்னு ரொம்ப ஆர்வமாக இருந்தது.  அதில் மத்திய பிரதேசத்தில் மாதவிடாய் தொடர்பாக பாரம்பரிய வழக்கத்தை கடைபிடி ப்பதாக எழுதியிருந்தார். மேலும் அது எனது ஊரிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் தீண்ட தகாதவர்களாக நடத்தப்படுவது. என் சகோதரிகளையே அவ்வாறு நடத்துவதை நான் பார்க்கிறேன். தனித்தட்டில் சாப்பிட சொல்வது, தனியாக உறங்கச் சொல்வது, பிறரை தொடக்கூடாது இன்னும் பல இத்யாதிகள் உண்டு. ஆக இதை வழக்கம் என சொல்வதை விட மூடநம்பிக்கைகளால் கெட்டி ...

Ponniyin selvan & It's participatory culture

Image
Participatory culture - New media studies Ponniyin selvan – Fiction movie based on novel This film is created based on the famous Tamil novel Ponniyin selvan and directed by Mr. Maniratnam. That novel is a fiction story based on historical events among Chola dynasty in Tamilnadu and written by Kalki ramamoorthy.  Before that novel – published as – serialized weekly magazine – 1950 A film adaptation of Ponniyin selvan novel was attempted by kamala Haasan and MGR and but it was unsuccessful.     Ponniyin selvan – Fiction movie based on novel This film is a created based on the famous Tamil novel Ponniyin selvan and directed by Mr. Maniratnam. That novel is a fiction story based on historical events among Chola dynasty in Tamilnadu and written by Kalki ramamoorthy.  Before that novel – published as – serialized weekly magazine – 1950 A film adaptation of Ponniyin selvan novel was attempted by kamala Haasan and MGR and but it was unsuccessful. ...