பூப்பு - மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும்

 


பூப்பு 
மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும்
எழுதியவர் - ரேணுகா தேவி
பக்கங்கள் - 48

இந்த புத்தகம் மாதவிலக்கு சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்களையும் மருத்துவ ஆலோசனைகளையும் தருவதாக இருக்கிறது. முதலில் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தற்காக ஆசிரியருக்கும் படைப்பிற்கும் வரவேற்பை அளிக்க வேண்டும். 

இது பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என எழுதியிருந்தது. ஆனால், இதை அனைத்து பாலினத்தாரும் வாசிக்க வேண்டியற்றுள் ஒன்று. புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை இக்குழுவில் பார்த்தேன். வெகு நாட்களுக்கு முன்பாகவே இதை வாசிக்கனும்னு ரொம்ப ஆர்வமாக இருந்தது. 

அதில் மத்திய பிரதேசத்தில் மாதவிடாய் தொடர்பாக பாரம்பரிய வழக்கத்தை கடைபிடி ப்பதாக எழுதியிருந்தார். மேலும் அது எனது ஊரிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் தீண்ட தகாதவர்களாக நடத்தப்படுவது. என் சகோதரிகளையே அவ்வாறு நடத்துவதை நான் பார்க்கிறேன். தனித்தட்டில் சாப்பிட சொல்வது, தனியாக உறங்கச் சொல்வது, பிறரை தொடக்கூடாது இன்னும் பல இத்யாதிகள் உண்டு. ஆக இதை வழக்கம் என சொல்வதை விட மூடநம்பிக்கைகளால் கெட்டி தட்டிப் போனவர்களால் இழைக்கப்படும் 'தீண்டாமை ' எனவே சொல்ல வேண்டும். இதுகுறித்த கேள்விகளை நான் எழுப்பிய போதெல்லாம் எனக்கு சரியான பதில்களை பெற்றோர்கள் தருவதில்லை. அவர்களுக்கு தெரியாது என்ற போதிலும் அதற்கான உரையாடல் களத்திற்கு வரவே தயாராக இல்லை. 

மேலும் நான் அணையாடைகளை (napkins) கடைகளில் வாங்கிக் கொடுக்க செல்லும்போது அவர்கள் அதை செய்தித்தாளில் பொதிந்து கொடுப்பார்கள். இது எல்லாம் ஏன்? ஏன்? எனும் கேள்விகள் எனக்கு முன்னதாக இருந்தன. ஆனால் அதற்கான காரணங்களைப் புரிந்து கொள்வதற்கான பக்குவம் அப்போது இல்லை. 

அடுத்ததாக மாதவிலக்கு நேரத்திலும் விருப்பமிருந்தால் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்பது புதிதாக இருந்தது. அதை இணையத்திலும் தேடிப் பார்த்தேன். உண்மை தான். இவையெல்லாம் உரையாட படாதவைகளில் முக்கியமான விடயங்கள் என நான் நினைக்கிறேன். 

மேலும் இதில் அணையாடைக் கோப்பைகளைப் (menstrual cup)பற்றிய தகவல்கள் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சில இடங்களில் வந்த கருத்துகளே (மாதவிடாய் பற்றிய விளக்கங்கள்) திரும்ப வருவதாக தோன்றியது. மற்றபடி வாசிக்கப்பட வேண்டிய புத்தகங்களுள் முக்கியமானது.
தொடர்ந்து உரையாடுவோம் ....

Comments

Popular posts from this blog

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1