சென்னையில் ஒரு சம்பவம்
இன்னைக்கு சாயங்காலம் சென்னை அசோக் நகர் பக்கத்துல நடந்து வந்துட்டு இருக்குறப்ப ஒரு சம்பவம் நடந்துகிட்டு இருந்தது. சரி என்னடா நடக்குதுன்னு நின்னு பார்ப்போம் என கவனிச்சேன். கடவுள் பெயரை சொல்லி காசு கொடுத்து ஏமாந்து போன ஒரு தம்பதி நின்னுட்டு இருந்தாங்க. அந்த பக்கம் ஒரு குறி சொல்ற பெண் நின்னுகிட்டு இருந்தாங்க.
இந்த குறி சொல்ற பெண் அவங்க கிட்ட ஏதேதோ சொல்லி 2000 ரூபாய் வாங்கிட்டு பட்ட நாமத்த போட்டுட்டாங்க. காச இழந்த இந்த தம்பதி அதை எப்படிடா வாங்குவது என்று வாதாடிட்டு இருக்காங்க. ஒரு கட்டத்துல காச இழந்த அந்த ஆண் அவர் வைத்திருந்த நாக உருவ சிலையை எடுத்துக்கிட்டு வந்தாரு. உடனே அந்த குறி சொல்ற பெண் இதை எடுத்துக்கிட்டு போனா, 'அதுக்கு தகுந்த மாதிரி அனுபவிப்ப அப்படின்னு சொல்லுது'. நான் அனுபவிச்சா அனுபவிச்சிட்டு போறேன். ஆனா காசு இழந்தவர் மனைவி எதுக்கு நமக்கு இது, அதை போட்டுட்டு வந்துருங்க அப்படின்னு சொல்லுறாங்க. அவங்களுக்குள்ளே ஒரு சின்ன கடவுள் பயம் எட்டிப் பார்க்கிறத கவனிச்சேன்.
அந்த நாக சிலையை திருப்பி போட்டுட்டு நீ நாசமா போய்டுவ உன் குடும்பமே விளங்காமல் போய்விடும் அப்படி இப்படின்னு சாபம் கொடுத்துட்டு கோவத்தோட வந்துட்டாங்க. அந்த குறி சொல்ற பெண் கொஞ்சம் திமிரா 'உன் காச நான் தரேன்னு சொல்லிட்டேன். இதுக்கு மேல வார்த்தை எதுவும் பேசாத' அப்படிங்கிது. இவர் இந்த மாதிரி ஏமாத்தி பிழைக்கிற உனக்கு இந்த ரோசம் எல்லாம் வர வேண்டியது தான் அப்படின்னு பயங்கரமா திட்டி முடிச்சிட்டு வந்துட்டாங்க.
கொஞ்ச நேரம் கழித்து பாதிக்கப்பட்ட அந்த தம்பதியிடம் என்ன நடந்தது என கேட்டேன். அவர்கள் கூறியதாவது:-
"எங்களுக்கு இருக்கிற பிரச்சனைக்கு என்ன காரணம் அப்படின்னு இவங்க கிட்ட கேட்க வந்தோம். 2000 ரூபாய் தாங்க, ஒரு பரிகாரம் பண்ணா சரியா போயிடும்னு சொன்னாங்க. நாங்களும் கொடுத்தோம். ஆனால் பரிகாரம் பண்ணல. என்னன்னு கேட்டா அது சாமிகிட்ட கொடுத்துட்டேன் அப்படின்னு சொல்றா... நாங்க வந்து கேட்டப்ப நாளைக்கு வா திருப்பி தரேன்னு நேத்து சொன்னா. இப்ப வந்து கேட்டா மாத்தி மாத்தி பேசுறா. நாளைக்கு வா 500 ரூபா தரேன்னு சொல்றா.. இவ நாசமா போவா." இப்படி சொல்லிட்டு போய்ட்டாங்க.
இவங்கள எல்லாம் நம்பி எப்படி 2000 ரூபாய் கொடுத்தார்கள், போலீஸ் ல புகார் கொடுக்க வேண்டியது தானே அப்படின்னும் யோசிச்சேன். எதுக்கு அந்த நாக சிலையை திருப்பி போட்டார், அந்த பித்தளை சிலையை எடுத்துக்கிட்டு போனவாவது, பொழப்பு நடத்த முடியாமல் திரும்ப காசு கொடுக்குமில்ல அப்படின்னு தோணுச்சு. இதே மாதிரி சம்பவம் எங்க ஊரிலும் நடந்தது. அந்த மாதிரி அவங்க முன்ன கூட்டியே பயிற்சி எடுத்துட்டு வருவாங்க போலன்னு நினைச்சுட்டு நடையை கட்டினேன். இந்த அரசாங்கமும் அதிகாரிகளும் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க? அப்படின்னு தோணுச்சு. வேலை வாய்ப்பு இல்லாததுனால இந்த வேலைக்கு வராங்களா? இல்ல இது உடல் உழைப்பு இல்லாம காசு பார்க்கலாம், இதை யாரும் தட்டி கேட்க மாட்டாங்க என்கிற தைரியத்தில் இதை பண்றாங்களா?. இப்படி யோசிச்சிட்டே கொஞ்சம் தூரம் நடந்துட்டு போன பிறகு பார்த்தா இதே மாதிரி வரிசையா நாலு பேரு தள்ளி தள்ளி உட்கார்ந்து இருக்காங்க. அப்பதான் தோணுச்சு இங்க கடவுள் பெயரை வைத்து பொழப்பு நடத்தினால் காசு சம்பாதிக்கலாம் அப்படின்னு நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கு....
கவனம் மக்களே....
- இசக்கிராஜன்
(24.1.23 )
Comments
Post a Comment