சலனச் சித்திரங்களில் சமூகம் - புத்தக விமர்சனம்
சினிமா என்பது இன்றைய மனிதர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அது ஒரு பக்கம் மானுடவியல், பண்பாடு, இயங்கியல், கலைகள் என பல பரிமாணங்களைக் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ஆனால், மற்றொரு பக்கம் சில திரைப்படங்கள் வணிக நோக்கில் மனிதர்களின் பணம் மற்றும் நேரத்தை விழுங்குகிறது.
இத்தைகைய சூழலில் வெகுசன மக்களால் கொண்டாடப்பட்டு தமிழில் வெளியாகி சில விமர்சனங்களை பெற்ற திரைப்படங்களை பற்றிய தனது காட்டமான விமர்சனத்தை வாழ்வியல், உளவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வோடு எழுதியுள்ளார். இரண்டாவது பகுதியாக சில மலையாள திரைப்படங்களையும், அவர்களின் இன ரீதியான காட்சியமைப்பு அணுகுமுறைகளையும், தனித்துவ கலை படைப்பைகளையும் நம்முன் எடுத்து வைக்கிறார். சினிமா உலகின் வெகு வேகமான உற்பத்தி வளர்ச்சியில் மறைந்து போன சில காவியங்கள் பற்றிய அறிமுகமும், அவற்றின் மீதான பல கோணப் பார்வையையும் நமக்கு எழச் செய்கிறார்.
சத்யஜித் ரேயின் காலம் தாண்டி நிற்கும் கலைப்படைப்புகளையும், அவை சொல்லும் மானுட வாழ்வியல் கதைகளையும் அறிமுகப் படுத்துகிறார்.
வாசிக்கும் போக்கில் சில வாக்கிய பிழைகள் இருப்பது அயர்ச்சியைத் தருகிறது. மேலும், ஆங்காங்கே சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்ததை அடுத்த பதிப்பில் நீக்கலாம். பின்னர், கள்ளக்காதல் என்ற வார்த்தை பிரயோகம் தவிர்க்க வேண்டியது. அதற்கு மாற்றாக திருமணம் தாண்டிய உறவுகள் என பயன்படுத்தலாம். திரைப்படங்கள் பெற்ற விருதுகள் பற்றிய தகவல்கள் எனக்கு வாசிக்க நேரம் இன்னும் அதிகமாக்கியது என நினைக்கிறேன். ஆனால், பொறுமையாக உள்வாங்கி வாசிப்பது தான் அறிவைத் தூண்டக்கூடியது என்பது என் புரிதல்.
ஆனால், திரைப்படங்கள் மீது காதல் கொண்ட எவரும் அதைப் பற்றிய விமர்சனங்களை வாசிப்பதும், பகுப்பாய்வும், கலந்துரையாடுவதும் இன்றியமையாதது. அதிலும் நாம் பார்க்காமல் விட்ட நல்ல காவியங்களை எளிதாக அறிமுகப் படுத்துவோர்களை நிச்சயம் வரவேற்க வேண்டும். சினிமா மீதான இன்னொரு பார்வையையும், விமர்சனத்தின் அவசியத்தையும் தருகிற ஒரு நேர்மையான படைப்பு இது.
தொடர்ந்து வாசிப்போம் உரையாடுவோம்...
ஆக்க பூர்வமான விமர்சனம் பெற்றுள்ளேன். மிக்க நன்றி
ReplyDelete