kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

 

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென

மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

-      கணியன்  பூங்குன்றன் 

பொருள்

 

நன்மை தீமை மற்றவரால் வருவதில்லை

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

மரணித்தல் புதுமையில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை

வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை.

மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பொழிந்து பெரிய ற்றில் ஓடும் படகுபோல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று

முன்னோடிகள் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆதலினால்,

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை. பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

எல்லா ஊரும் எம் ஊரே, எல்லா மக்களும் எம் மக்களே 

  (இசக்கிராஜன்  - விளக்கவுரை எழுதியது)

 

Meaning

Good and bad not come from others

Pains and pain reliefs are from within


To die is nothing new; Won't celebrate life is only to be joy

Won't hate Living is distress


A cold drop of rain fall with lightning,

It's running like a boat on a river, our survival takes place naturally


We are enlightened by the consciousness imparted by the predecessors.

Therefore, won't contempt the youngers

Won't praise the elders 


All town is our town, everyone is kin


-Kaniyan poongundran 

(Translation by myself)

-      Esakkirajan (Translator)

Comments

Popular posts from this blog

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1