மகான் - திரை பட விமர்சனம்





 எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தான் படத்தை பார்க்க போனேன்.இந்த படம் பிடிச்சி இருக்கா, பிடிக்கலையானு சொல்ல முடியல ஆனா இது ஒரு சராசரியான பொழுதுபோக்கான படம் . 

பாபி சிம்ஹா இப்படி நடிப்பாரானு இந்த படத்தின் மூலமாக தான் தெரிந்தது. அவர் பன்ன படங்களில் இது அவருக்கு பெயர் சொல்லும் படி என்றும் இருக்கும்.

விக்ரம் சொல்ல வேண்டுமா எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் அதுவாக மாறும் திறமையுடையவர். அவரை விட துருவ் அவரோட கதாபாத்திரத்திற்கு ஆழமான நடிப்பை தந்து இருக்கிறார். 


 படத்தின் நீளம் பொறுமைய கட்டாயம் சோதிக்கிறது. அதற்கு காரணம் முதல் பாதியில் எந்தவொரு காட்சியும் அழுத்தம் இல்லாமல் ஏதோ போகிறது. படத்தின் பலம் கடைசி 40 நிமிடங்கள் தான். அப்பா, மகன் ஆடும் ஆட்டம் நன்றாகவே இருந்தது.

என்னை பொறுத்த வரையில் மொத்த படத்தில் புதுசா நல்லா இருந்தது அப்படினா பாபி சிம்ஹா & துருவ் நடிப்பு தான். படத்தின் மிகப்பெரிய குறை மேக்கப். அதுவும் சிம்ரனுக்கு இரண்டாம் பாதியில் போடப்பட்ட மேக்கப்பா இருக்கடும், தலையில் விக் இதெல்லாம் பார்க்கும்படியாக  இல்லை. 

"தப்பு செய்ய கூட சுதந்திரம் இல்லைன்னா அது சுதந்திரமே இல்லை" அப்படின்னு காந்தி சொன்ன இந்த மையக்கருத்தை வைத்துதான் படம் படம் முழுக்க காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கு. இறுதி காட்சிகளில் வரும் வசனங்கள் நன்றாகவே இருந்தது. 

ஆனா இந்த படத்தைப் பத்தின மக்களோட கருத்தை பார்த்த பிறகு, படத்தோட கருத்து எல்லாருக்கும்  சரியா  போயி சேரலை என்று தான் நினைக்கிறேன். ரொம்ப எதிர்பார்த்து பார்க்க வேணாம். 

படத்தைப் பற்றிய விமர்சனம் தர கொஞ்சம் தாமதமாகிவிட்டதற்காக மன்னிக்கவும். இதே மாதிரி இன்னொரு பட விமர்சனத்தில் உங்களை சந்திக்கிறேன் வாசகர்களே... 

- ராஜன் (@kavithai_priyan) 

Comments

Popular posts from this blog

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1