Posts

Showing posts from 2024

kaniyan poongundranar's poem - கணியன் பூங்குன்றனாரின் பாடல்

  தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே , வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே , மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் , மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே , சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே . யாதும் ஊரே யாவரும் கேளிர் -       கணியன்   பூங்குன்றன்  பொருள்   நன்மை தீமை மற்றவரால் வருவதில்லை துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை மரணித்தல் புதுமையில்லை ; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை. மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பொழிந்து பெ ரிய  ஆ ற்றில் ஓடும் படகுபோல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று முன்னோடிகள் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆதலினால் , சி றியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை....

தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4

Image
      குறிஞ்சி (மலைப்பகுதி) நிலத் தெய்வமான சேயோன் தான் முருகன் (முருகு = அழகு) என தொல்காப்பியர் கூறுகிறார்.  முருகன் எனும் பெருந்தெய்வம் தமிழ் பேசும்  மக்களின் தலைவராக இருந்து போரில் தன் மக்களை காத்தவர் ஆவார்.  ஆகையால், இன்று உலகம் முழுவதிலும் வசிக்கும் தமிழர்கள் முருகனை வழிபடுகின்றனர். (பேரா.ரவீந்திரன் அவர்களின் உரையிலிருந்து) ஸ்கந்தன், சுப்பிரமணியன் போன்ற ஆரிய கடவுள்களோடு சேர்த்து முருகனின் தோற்றத்தை வைதீக மதவாதிகள் மாற்றிவிட்டார்கள். அத்தோடு அவருக்கு தேவசேனா மனைவி எனவும், சிவன் மற்றும் பார்வதி பெற்றோர் எனவும் வைதீக மதவாதிகள் எழுதி பரப்புரை செய்தனர். ஏனென்றால், தமிழ் மக்களின் பெருந்தெய்வமான (deity) முருகனை ஆரியக் கடவுள்களின் குடும்பத்தைச் சேர்ந்த தேவசேனாவின் கணவர் எனக் கூறியதின் மூலம், முருகனை இந்து மதத்திற்குள் கொண்டு வர முடிந்தது. அவ்வாறு தமிழ்மக்களுக்கே உரிய பண்பாட்டினையும், (culture and communication) மரபையும், வரலாற்றையும்  மடைமாற்றி அதன் மூலம் ஆதாயத்தைத் (benefit) தேடிக்கொண்டனர்.  இந்து வைதீக மதவாதிகளின் கதைப்படி, முருகனின் பெற்றோரான சிவன்...

தெய்வ வழிபாடும், சாதியும், வர்க்கமும்- 3

Image
கடந்த பாகத்தில் ஆண் தெய்வங்களின் கதை மற்றும் வழிபாட்டு முறையைப் பார்த்தோம். இப்போது பாப்பாத்தி அம்மன் எனும் பெண் தெய்வத்தின் கதையை பார்ப்போம்.  இந்த பாப்பாத்தி அம்மன் இடைநிலை சாதியினரின் (நிலக்கிழார் - land lords)  கூட்டு சதியால் பாலியல் சுரண்டலுக்கு (sexual exploitation) ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வாய்வழிக் கதைகள் கூறுகின்றன. இந்த பெண் இணையரின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பெண் திரும்ப பேயாக வந்து தொந்தரவு தருவதாக எழுந்த பயத்தின் பேரில் பாப்பாத்தி அம்மன் தெய்வமாக ஆக்கப்பட்டார். ஏனென்றால், இந்தப் பெண் தெய்வத்தின் கோவில் கொடை விழாவை ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே நடத்துகின்றனர். இந்த மாதிரி ஒவ்வொரு தெய்வங்களின் வழிபாட்டிற்கு பின்னால் நிலவுடைமை மற்றும் ஆணாதிக்க சமூகத்தின் பல வரலாற்று நிகழ்வுகள் இருக்கும் என்பது தொடர்பியல் மானுடவியல் பார்வையில் நமக்கு புலனாகிறது. இந்தக் கதைகள் ஆராய்ச்சியாளருக்கு வில்லுப்பாட்டு, வாய் வழி கதைகள் மற்றும் மூத்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது.  இந்த ஊரின் கன்னிமார் கோவிலின் வழிபாட்டு முறை பிராமணியத் ...

தெய்வ வழிபாடும், சாதியும், வர்க்கமும்- 2

Image

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1

Image
    முதலில் சிறு தெய்வம் என்ற சொல்லின் தோற்றத்தை நோக்குவோம். "சென்று நாம் சிறு தெய்வம் சேரோம் அல்லோம்" என்று அப்பர் தேவாரத்தில் பயின்று வருகிறது. இதன் காலம் கிபி ஏழாம் நூற்றாண்டு ஆகும். இதற்கு நேர் மாறாக பெருந்தெய்வம் என்ற சொல் வழக்கு புறநானூற்றிலேயே காணப்படுகிறது. 2 வேந்தர்களையும் ஒன்றாக கண்ட புலவர், இரு பெரும் தெய்வமும் உடன் நின்றா அங்கு" என்று பலராமனையும் திருமாலையும் நினைத்து பாடுகிறார். எனவே சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வழிபடும் கடவுளரைச் சிறு தெய்வங்கள் எனவும், மேல் தட்டுமக்கள் வழிபடும் தெய்வங்களை பெருந்தெய்வம் எனவும் குறிப்பிடும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்திருப்பதாக தெரிகிறது.  ஆய்வு நெறியில் சிறு தெய்வம், பெருந்தெய்வம் என்ற சொற்களை தாழ்ந்தவை உயர்ந்தவை என்ற பொருளில் எடுத்துக் கொள்ள இயலாது. உண்மையில் சிறு தெய்வங்கள் எனப்படுபவையே மிக பழைய நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பேணி நிற்பவையாகும். கட்டுரையில் சிறு தெய்வம் என்ற சொல் நாம் பழகிவிட்ட சொல் என்பதனாலேயே எடுத்தாளப்படுகிறது.    சிறு தெய்வம் என்ற சொல் எதைக் குறிக்கும்?  சிறு தெய்வங்களின் முதற்பண்பு அவ...