பத்மநாபா படுகொலை - ஜெ. ராம்கி
பத்மநாபா படுகொலை எழுதியவர் - ஜெ. ராம்கி பக்கங்கள் - 136 சுவாசம் பதிப்பகம் விலை - 160 ரூ இது ஒரு சுவாரசியம் நிறைந்த ஒரு உண்மை வரலாறு. இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமா என கற்பனை கூட செய்து கொள்ள முடியாது. ஆனால் 1990களில் நடந்த இச்சம்பவம் தமிழ்நாட்டையே உளுக்கியது. மேலும், தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே மாற்றி போட்டது என்றாலும் மிகையாகாது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் பத்மநாபாவைப் பற்றி எனக்கு அறிமுகமே கிடையாது. இதைப் படித்த பின்பு இப்படி ஒரு வரலாற்று நிகழ்வை எப்படி காட்சியாக ஆவணப்படுத்தாமல், பெரிதாக பேசாமல் இருந்தார்கள் எனக் கவலையாக இருந்தது. ஏனென்றால் நமக்குத் தெரிந்த தமிழ்நாடு அரசியலைத் தாண்டி புது பார்வையைத் தருகிறது. இனி அந்நிகழ்வு எவ்வாறு நடந்தது எனப் சுருக்கமாக பார்க்கலாம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுத்த பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட கதை. பத்மநாபா ஈழத்த தமிழர் விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்தி முதலில் போராடினாலும், பிற்காலத்தில் அவருக்கு கிடைத்த உலகளாவிய அரசியல் புரிதல்களினால் ஜனநாயக முறையை தேர்ந்தெடுத்தார். இதன் மூலமாக ஏற...