நட்சத்திரம் நகர்கிறது - திரைப்பட விமர்சனம்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwrAM-KrAl7hqdk0mICsSHghGJbm-EaYjTL_4KYTstuyHc9f6N_8VEs2h8jxncxlHplhRUwtXoYKNZcts2T-KqpNfyFxyd6lzDk8LahjUW3J8PwMq26vFYQ4IORMD4rJZ4AAeEpS4rUOThYQItw3-3EM5KseOElk9oOpK2R_3gzCzLP7RucwUW2dyKkg/s320/IMG_20220831_220347.jpg)
இந்தப் படம் நான் எதிர்பார்த்ததை போலவே commercial சினிமாவாக இல்லாமல் content பேசும் படமாக இருந்தது. இந்தப் படம் சமூக சீர்கேடுகளை அதன் அக்கு வேறு ஆணிவேராக ஒவ்வொன்றையும் உரையாடல் படுத்தி இருப்பார் இயக்குனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது. காதலில் ஒரு படிப்பினையும், பயணத்தையும் உருவாக்குகிறது.சமூகத்தின் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கிடையே உரையாடலை உருவாக்குகிறது. இப்படம் திருவாரூரில் முதல் நாள் முதல் காட்சி 11:00 மணிக்கே கிடைத்தது. இயக்குனர் Pa.Ranjith அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் (Yaazhi Films) பேரன்புகளும் வாழ்த்துக்களும். பெரும்பாலானோர் படம் மெதுவாக போவதாக சொல்கிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு காட்சியும் முக்கியம் என நினைக்கிறேன். விமர்சனம் தனிபட்டது என்பதால் எளிதாக எடுத்துக்கொள்ளலாம். அதுவும் படைப்புக்கு நலன் தரக் கூடியது தானே.. ஒரு 50 - 60 வயதுக்குள் இருப்பவர்களின் விமர்சனம் பற்றி அறிய ஆவலாக இருக்கிறது. கமர்ஷியல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக்கப்படுமா எனில் கேள்விக்குறிதான். அதைபோல இவர்களின் விமர்சனம் ஒன்றில் " படம் இன்னும் நல்லா எடுத்துறுக்கலாம் என சொன்...