தெய்வ வழிபாடும், சாதியும், வர்க்கமும்- 3
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxsa51OpHH_wEHP1MEOFiWOTFe6P8sqKK5PW2jbps8Q9Rg8-7DY9li-nZcazjsAYti-X2e-7umoNNft4EpirjHjew4WaMWyKqU323SUqgzqsH_DkTBZsgeamqcznNxqq10FqLySv0hO3egUr_QUkyssQMCubBc-GMr-q2lbHE7VuMPExDU6sg5ZlNjevXa/s320/Screenshot%20(2).png)
கடந்த பாகத்தில் ஆண் தெய்வங்களின் கதை மற்றும் வழிபாட்டு முறையைப் பார்த்தோம். இப்போது பாப்பாத்தி அம்மன் எனும் பெண் தெய்வத்தின் கதையை பார்ப்போம். இந்த பாப்பாத்தி அம்மன் இடைநிலை சாதியினரின் (நிலக்கிழார் - land lords) கூட்டு சதியால் பாலியல் சுரண்டலுக்கு (sexual exploitation) ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வாய்வழிக் கதைகள் கூறுகின்றன. இந்த பெண் இணையரின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பெண் திரும்ப பேயாக வந்து தொந்தரவு தருவதாக எழுந்த பயத்தின் பேரில் பாப்பாத்தி அம்மன் தெய்வமாக ஆக்கப்பட்டார். ஏனென்றால், இந்தப் பெண் தெய்வத்தின் கோவில் கொடை விழாவை ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே நடத்துகின்றனர். இந்த மாதிரி ஒவ்வொரு தெய்வங்களின் வழிபாட்டிற்கு பின்னால் நிலவுடைமை மற்றும் ஆணாதிக்க சமூகத்தின் பல வரலாற்று நிகழ்வுகள் இருக்கும் என்பது தொடர்பியல் மானுடவியல் பார்வையில் நமக்கு புலனாகிறது. இந்தக் கதைகள் ஆராய்ச்சியாளருக்கு வில்லுப்பாட்டு, வாய் வழி கதைகள் மற்றும் மூத்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. இந்த ஊரின் கன்னிமார் கோவிலின் வழிபாட்டு முறை பிராமணியத் ...