தெய்வ வழிபாடும் சாதியும் வர்க்கமும் - 4
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjRlguux7c0Bsrx1DYgBdw0shziBw8vFHlsZCTTYFwAr5dhqZynHQDGstGBmKKyP1pMHDcg50q7vmmhKKxPSRtD2QTRLwkxujkNUkaul5E5DZSASU-J7PVSLaTF8r0rX-pMvjCk9lQnGY3XpNWlQB9VAz7AtdznSZx1gAyU3OT8ZHBhytC9SQa-mqOzCsb/s320/71682231_1380564882108331_2091720300889636864_n.jpg)
குறிஞ்சி (மலைப்பகுதி) நிலத் தெய்வமான சேயோன் தான் முருகன் (முருகு = அழகு) என தொல்காப்பியர் கூறுகிறார். முருகன் எனும் பெருந்தெய்வம் தமிழ் பேசும் மக்களின் தலைவராக இருந்து போரில் தன் மக்களை காத்தவர் ஆவார். ஆகையால், இன்று உலகம் முழுவதிலும் வசிக்கும் தமிழர்கள் முருகனை வழிபடுகின்றனர். (பேரா.ரவீந்திரன் அவர்களின் உரையிலிருந்து) ஸ்கந்தன், சுப்பிரமணியன் போன்ற ஆரிய கடவுள்களோடு சேர்த்து முருகனின் தோற்றத்தை வைதீக மதவாதிகள் மாற்றிவிட்டார்கள். அத்தோடு அவருக்கு தேவசேனா மனைவி எனவும், சிவன் மற்றும் பார்வதி பெற்றோர் எனவும் வைதீக மதவாதிகள் எழுதி பரப்புரை செய்தனர். ஏனென்றால், தமிழ் மக்களின் பெருந்தெய்வமான (deity) முருகனை ஆரியக் கடவுள்களின் குடும்பத்தைச் சேர்ந்த தேவசேனாவின் கணவர் எனக் கூறியதின் மூலம், முருகனை இந்து மதத்திற்குள் கொண்டு வர முடிந்தது. அவ்வாறு தமிழ்மக்களுக்கே உரிய பண்பாட்டினையும், (culture and communication) மரபையும், வரலாற்றையும் மடைமாற்றி அதன் மூலம் ஆதாயத்தைத் (benefit) தேடிக்கொண்டனர். இந்து வைதீக மதவாதிகளின் கதைப்படி, முருகனின் பெற்றோரான சிவன்...