Posts

Showing posts from January, 2024

தெய்வ வழிபாடும், சாதியும் வர்க்கமும் - 1

Image
    முதலில் சிறு தெய்வம் என்ற சொல்லின் தோற்றத்தை நோக்குவோம். "சென்று நாம் சிறு தெய்வம் சேரோம் அல்லோம்" என்று அப்பர் தேவாரத்தில் பயின்று வருகிறது. இதன் காலம் கிபி ஏழாம் நூற்றாண்டு ஆகும். இதற்கு நேர் மாறாக பெருந்தெய்வம் என்ற சொல் வழக்கு புறநானூற்றிலேயே காணப்படுகிறது. 2 வேந்தர்களையும் ஒன்றாக கண்ட புலவர், இரு பெரும் தெய்வமும் உடன் நின்றா அங்கு" என்று பலராமனையும் திருமாலையும் நினைத்து பாடுகிறார். எனவே சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வழிபடும் கடவுளரைச் சிறு தெய்வங்கள் எனவும், மேல் தட்டுமக்கள் வழிபடும் தெய்வங்களை பெருந்தெய்வம் எனவும் குறிப்பிடும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்திருப்பதாக தெரிகிறது.  ஆய்வு நெறியில் சிறு தெய்வம், பெருந்தெய்வம் என்ற சொற்களை தாழ்ந்தவை உயர்ந்தவை என்ற பொருளில் எடுத்துக் கொள்ள இயலாது. உண்மையில் சிறு தெய்வங்கள் எனப்படுபவையே மிக பழைய நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பேணி நிற்பவையாகும். கட்டுரையில் சிறு தெய்வம் என்ற சொல் நாம் பழகிவிட்ட சொல் என்பதனாலேயே எடுத்தாளப்படுகிறது.    சிறு தெய்வம் என்ற சொல் எதைக் குறிக்கும்?  சிறு தெய்வங்களின் முதற்பண்பு அவ...