Posts

Showing posts from March, 2023

சலனச் சித்திரங்களில் சமூகம் - புத்தக விமர்சனம்

Image
சினிமா என்பது இன்றைய மனிதர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அது ஒரு பக்கம் மானுடவியல், பண்பாடு, இயங்கியல், கலைகள் என பல பரிமாணங்களைக் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ஆனால், மற்றொரு பக்கம் சில திரைப்படங்கள் வணிக நோக்கில் மனிதர்களின் பணம் மற்றும் நேரத்தை விழுங்குகிறது.  இத்தைகைய சூழலில் வெகுசன மக்களால் கொண்டாடப்பட்டு தமிழில் வெளியாகி சில விமர்சனங்களை பெற்ற திரைப்படங்களை பற்றிய தனது காட்டமான விமர்சனத்தை வாழ்வியல், உளவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வோடு எழுதியுள்ளார். இரண்டாவது பகுதியாக சில மலையாள திரைப்படங்களையும், அவர்களின் இன ரீதியான காட்சியமைப்பு அணுகுமுறைகளையும், தனித்துவ கலை படைப்பைகளையும் நம்முன் எடுத்து வைக்கிறார். சினிமா உலகின் வெகு வேகமான உற்பத்தி வளர்ச்சியில் மறைந்து போன சில காவியங்கள் பற்றிய அறிமுகமும், அவற்றின் மீதான பல கோணப் பார்வையையும் நமக்கு எழச் செய்கிறார்.  சத்யஜித் ரேயின் காலம் தாண்டி நிற்கும் கலைப்படைப்புகளையும், அவை சொல்லும் மானுட வாழ்வியல் கதைகளையும் அறிமுகப் படுத்துகிறார்.  வாசிக்கும் போக்கில் சில வாக்கிய பிழைகள் இருப்பது அயர்ச்ச...