Posts

Showing posts from February, 2023

இக்கிகய் - புத்தக விமர்சனம்

Image
இக்கிகய் - நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான ஜப்பானிய ரகசியம் எழுதியவர்கள் - ஹெக்டேர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்  பக்கங்கள் - 206  இப்புத்தகம் விற்பனையில் உலக சாதனை படைத்த, தமிழில் மொழி பெயர்த்த ஒரு கட்டுரை தொகுப்பு. இக்கி கய் என்பது நம் வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழவைக்கும் நம்மிடமுள்ள காரணியாகும். இப்புத்தகத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றியும் விரிவாக எழுதப்பட்டிருக்கும்.  உலகிலேயே மிக நீண்ட ஆயுளை (122 வயது) கொண்டவர்களில் அதிகமானோர் ஜப்பானில் உள்ள ஒகிமி எனும் ஊரில் வசிக்கின்றனர். ஆக அவர்கள் அந்த நகரத்தில் இருப்பவர்கள் மட்டும் எப்படி நீண்ட ஆயுளை பெறுகிறார்கள் எனும் உண்மையை தேடும் வேட்கையில் இந்நூலை எழுதிய ஆசிரியர்கள் அங்கு தேடிச் செல்கின்றனர். அவர்கள் பயணத்தின் மூலம் கிடைத்த ஞானத்தை ஒரு புத்தகமாக எழுத முற்பட்டு அவற்றை ஒரு குறிப்புகளாக எழுதிக் கொண்டே வந்துள்ளனர். அவற்றில் நீண்ட ஆயுளை அடைவதற்கு செய்ய வேண்டியவைகளாக உடற்பயிற்சி, நல்ல உணவு, நல்ல தத்துவம் , இக்கிகயை கண்டுபிடிப்பது, மீண்டு எழுவது, மன...