டோட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி- புத்தக விமர்சனம்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0FJOMIy8GiGZgYBobRJUDiPxxWRkxUTYtqp6LxnTI9njIQNARHQZYvF174MG4AW7jEa4kIKm50IT6hwuGcsYZQmGpUi7mxTad6S_e2UQlWGp9Eb2K_MInk-tFwED6kTq0XSdh-iB4Z7TSbTqQExkXvc1m2fNv7GzTVxP6SB1aIrWxXyFzScWl4OlePA/s320/IMG20220909102418.jpg)
டோட்டா சான் ஜன்னலில் ஒரு சிறுமி ஆசிரியர் - டெட்சுகோ குரோயோநாகி பக்கங்கள் - 161 இந்த புத்தகத்தை எனது நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இது ஒரு உண்மைக் கதை. இந்த கதையின் கதாநாயகியே இந்த புத்தகத்தை எழுதியுள்ளது தனிச்சிறப்பு. இதில் எனக்கு பிடித்த ஆசிரியர் கதாபாத்திரமான கோபயாக்ஷியே கதாநாயகன் என கூறலாம். இது ஜப்பானில் இருந்த டோமோயி பள்ளியைப்பற்றியும் அதில் படித்த சிறுமியை பற்றிய வரலாற்று கதை இது. டோமோயி என்ற அந்த பள்ளியானது செயல்முறை கல்வியை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டுள்ளது. அந்த காலகட்டத்திலே மாணவர்கள் மீது எந்த வன்முறையும் இல்லாமல் பாடத்திணிப்பும் இல்லாமல் ஒரு கல்வி முறை இருந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. அக்கல்வி முறையில் படித்தவர்கள் சாதனையாளர்களாக விளங்கினர் என்பதை சாட்சியத்துடன் குறிப்பிட்டுள்ளனர். எனக்கு அதில் படித்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமே எனத் தோன்றியது. ஆனால் இந்தப் பள்ளி 1937 முதல் 1945 வரை மட்டுமே இருந்துள்ளது. அமெரிக்கா ஜப்பான் மீது தாக்குதல் நடத்தும்போது இந்தப் பள்ளியை விமானம் மூலம் தாக்கினர். பிறகு இம்மாதிரியான ஒரு பள்ள...